Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா ஊரடங்கு முடிந்ததும் விமானப் பயணக் கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளதா?

Webdunia
புதன், 6 மே 2020 (13:08 IST)
முடக்கநிலை முடிந்து உலகெங்கும் விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கும் பொழுது விமானப் பயணக் கட்டணம் கட்டாயம் குறைய வேண்டும். எனினும் அதன் பின்பு குறைந்தது 50 சதவிகிதம் மீண்டும் அதிகரிக்கும் என்று இன்டர்நேஷனல் ஏர் டிரன்ஸ்போட் அசோசியேசன் எனும் சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக இயக்காமல் வைத்துள்ள தங்கள் விமானங்களை மீண்டும் பறக்கவிட வேண்டும் என்று விமான போக்குவரத்து நிறுவனங்கள் மிகவும் ஆவலாக இருப்பதால், விமானப் பயணம் தொடங்கும் பொழுது தேவைக்கு அதிகமான அளவில் விமானங்கள் இயக்கப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் விமான பயணங்கள் மேற்கொள்வோர் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும் என்பதால் அந்த அழுத்தத்தின் காரணமாக விமான நிறுவனங்கள் பயண கட்டணத்தை குறைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

அதன்பின்பு தங்களுடைய நடு இருக்கைகளை காலியாக வைத்துக் கொண்டே விமானங்களை இயக்க வேண்டிய சூழல் உருவானால் அதை ஈடுகட்ட விமானப் பயணங்களுக்கான கட்டணத்தை அதிகரிக்கும் நிலைக்கு விமான நிறுவனங்கள் தள்ளப்படலாம்.

தற்போதைய சமூக விலகல் கடை பிடிப்பதற்கான முன்மொழிவுகளின்படி விமானங்களில் வரிசையாக இருக்கும் மூன்று இருக்கைகளில் நடு இருக்கையை காலியாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு விமானத்தின் கொள்ளளவை விட குறைவான எண்ணிக்கையிலேயே பயணிகளை வைத்து இயக்கினால் அது விமான நிறுவனங்களின் லாபத்தில் மோசமான தாக்கத்தை உண்டாக்கும்

நடு இருக்கைகளை காலியாக வைத்துக் கொண்டு விமானங்களை இயக்குவது என்பது ஒரு முட்டாள்தனமான திட்டம் என்று ரயன் ஏர் நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் ஓ'லியரி கூறுகிறார்.

தாங்கள் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட 122 விமான நிறுவனங்களில் நான்கு நிறுவனங்களால் மட்டுமே லாபம் ஏற்படாவிட்டாலும் தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க முடியும் என்று தெரிய வந்தது என இன்டர்நேஷனல் ஏர் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் தெரிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய வர்த்தக நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒருங்கிணைந்து, ஒன்றாக முடிவெடுத்து விமான பயண கட்டணத்தை அதிகரிப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.

பெரும்பாலான விமானங்கள் இயக்கப்படாமல் இருப்பதால் உலகின் பல்வேறு விமான போக்குவரத்து நிறுவனங்களும் தற்போது மோசமான நிதி நிலைமையை எதிர்கொண்டுள்ளன.

ஏற்கனவே சில விமான நிறுவனங்கள் ஆட்குறைப்பு மற்றும் குறிப்பிட்ட சில விமான நிலையங்களுக்கு விமானங்களை இயக்குவது ரத்து ஆகிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

"சமூக விலகலைக் கடைபிடிக்கும் நோக்கில் குறைவான பயணிகளுடன் விமானங்களை இயக்கினால் எத்தனை விமான நிறுவனங்களால் லாபகரமாக இயங்க முடியும் என்று தெரிந்துகொள்வது மிகவும் கடினமானது. விமானப் போக்குவரத்து துறையின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ஏற்கனவே இருந்த அளவை விட மிகவும் குறைவானதாகும்," என்கிறார் இந்த அமைப்பின் தலைமை பொருளாதார வல்லுநர் பயான்
நடுக் இருக்கைகளில் ஆட்களை அமர வைக்காமல் காலியாக வைத்து விமானங்களை இயக்குவதன் மூலம் கரோனா வைரஸ் பரவாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது என்று அவரது குழுவினர் கூறுகின்றனர் இதற்கு பதிலாக விமான பயணம் மேற்கொள்வோர் முக கவசம் அணிந்து கொள்வது பலனளிக்கும் என்று இன்டர்நேஷனல் ஏர் டிரன்ஸ்போட் அசோசியேஷன் கூறுகின்றது.

அதிகமான எண்ணிக்கையிலான மக்களை விமான பயணம் மேற்கொள்ள வைக்க வேண்டும் எனும் நோக்கில் விமான போக்குவரத்து நிறுவனங்கள் பயண கட்டணத்தை குறைக்கும்.

விமானப் பயணம் மேற்கொள்வோர் இன் எண்ணிக்கை பழைய நிலைமைக்கு திரும்பிய பின்பு மீண்டும் விமான கட்டணங்கள் உயர்த்தப்படலாம். ஆனால் 2021ஆம் ஆண்டில் தொடக்கத்திலேயே அவ்வாறு நடக்கும் என்று தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார் வாங்க பிறக்கப்போகும் குழந்தையை விற்க விளம்பரம் கொடுத்த தாய்.. அதிரடி கைது..!

முடிவெட்ட ஆன்லைனில் ஆர்டர் செய்த நபர்.. ரூ.5 லட்சத்தை இழந்ததால் அதிர்ச்சி..!

தெலுங்கு மக்கள் குறித்து தவறாக எதுவும் பேசவில்லை: நடிகை கஸ்தூரி விளக்கம்

நளினியை சந்தித்த பிரியங்கா, ராஜீவ் உடன் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினரை சந்திக்காதது ஏன்? வானதி சீனிவாசன்

'அமரன்’ படத்திற்கு வரிவிலக்கு.. மாணவர்களுக்கு இலவசம்.. வானதி சீனிவாசன் கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments