Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்க்சிய போராளி குழு தலைவர் பற்றி துப்பு கொடுத்தால் 37 கோடி ரூபாய் - அமெரிக்கா சன்மானம்

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (14:08 IST)
கொலம்பியாவில் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து வரும் தேசிய விடுதலை ராணுவம் எனும் போராளிக் குழுவின் தலைவர் வில்வர் வில்லேகாஸ் பலோமினோ குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
 
இதன் இந்திய மதிப்பு சுமார் 37 கோடி ரூபாய் ஆகும். அவரைக் கைது செய்ய உதவும் தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனும் இந்த அறிவிப்பை அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
தென்னமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு அவர் பயணம் மேற்கொண்டு இரண்டு நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது 38 வயதாகும் வில்வர் வில்லேகாஸ் பலோமினோ 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் கொக்கைன் போதை பொருள் விநியோகிக்கும் சதித் திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.
 
இ.எல்.என் என்று அறியப்படும் தேசிய விடுதலை ராணுவம் கொலம்பியாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் மார்க்சியப் போராளிக் குழுவாகும். கொலம்பியாவில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து, நிலம் மற்றும் வளங்களை சமமாகப் பிரித்து வழங்கும் நோக்கில் 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் சுமார் 2000 பேர் உறுப்பினர்களாக உள்ளார்கள். 1959இல் நிகழ்ந்த கியூபப் புரட்சியின் உந்துதலால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம்! தமிழக அரசு அறிவிப்பு..!

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments