Webdunia - Bharat's app for daily news and videos

Install App

140 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய 8 வயது சிறுவன்: கண்ணீரில் முடிந்த கதை...

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (11:57 IST)
ஜெர்மனியில் பெற்றோருக்குத் தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு ஓர் எட்டு வயது சிறுவன் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 
 
டோர்முன்ட் எனும் நகரை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் அந்தச் சிறுவன் காரை நிறுத்தி வைத்திருந்தபோது அதிகாலை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
காவல் அதிகாரிகளைப் பார்த்ததும் அந்தச் சிறுவன் கண்ணீர் விட்டு அழுதுள்ளான். காரை ஓட்டும்போது காரின் அபாய எச்சரிக்கை விளக்குகளை எரியவிட்டதுடன், காரின் பின்புறம் ஒரு சிறிய எச்சரிக்கை முக்கோணம் ஒன்றையும் அச்சிறுவன் மாட்டியுள்ளான்.
 
காவல் துறையினரிடம் தாம் கொஞ்ச தூரம் மட்டுமே ஓட்ட விரும்பியதாக அச்சிறுவன் தெரிவித்துள்ளான். ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள ஜோஸ்ட் நகரில், தங்கள் மகன் காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாக அவனது அம்மா காவல் துறைக்கு தகவல் அளித்தார்.
 
பின்னர் சுமார் 1.15 மணியளவில் அந்தச் சிறுவனை சாலையோரம் அவனது தாய் கண்டுபிடித்துள்ளார். இதற்கு முன்னர் தனியார் இடங்களில் அந்தச் சிறுவன் காரை ஒட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வேகமாக வாகனத்தை ஓட்டியது தமக்கு உடல்நலமின்மையை உண்டாக்கியதாகவும் அதனால் காரை நிறுத்தி விட்டதாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான். இந்த சம்பவத்தில் உயிர் மற்றும் பொருள் இழப்புகள் எதுவும் நடக்கவில்லை என காவல் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments