Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாமிய அரசு தலைவர்கள் பற்றிய தகவலுக்கு சன்மானம்

Webdunia
புதன், 6 மே 2015 (13:55 IST)
ஜிகாதிக்குழுவான இஸ்லாமிய அரசின் தலைவர்கள் 4 பேர் பற்றிய தகவல்களை தருபவர்களுக்கு மொத்தமாக 2 கோடி டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.


 

அந்த அமைப்பின் தற்கொலை தாக்குதலாளிகளின் தலைவராக அடையாளம் காணப்பட்ட தாரிக் அல் ஹர்ஸி, அமைப்பின் பேச்சாளராக அறிவிக்கப்பட்டுள்ள அபு முஹ்மட் அல் அட்னானி ஆகியோரும் அந்த 4 முக்கிய தலைவர்களில் அடங்குகிறார்கள்.
 
ஒட்டுமொத்த் படுகொலைகள், ஒரு சமூகத்தையே ஒட்டுமொத்தமாக திட்டமிட்டு ஒடுக்குதல், பாலியல் வல்லுறவு மற்றும் சிறார் கொலை ஆகிய அக்கிரமங்களுக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பு என்று அமெரிக்க அரசுத்துறை கூறுகிறது.
 
இஸ்லாமிய அரசின் தலைவரான அபு பக்ர் அல் பக்தாதி பற்றிய தகவல்களுக்காக அமெரிக்கா ஏற்கனவே ஒரு கோடி டாலர்களை சன்மானமாக அறிவித்துள்ளது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!