Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஸ்கட் வாங்கித் தருவதாக கூறி 6 வயது சிறுமியை சீரழித்த அயோக்கியன்

Webdunia
செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (11:13 IST)
ஒடிசாவில் 6 வயது சிறுமியை பிஸ்கட் வாங்கித் தருவதாக கூறி, சிறுமியை சீரழித்த மனித மிருகத்தை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகளவில் உள்ளது. 
 
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அவசர சட்டம் மத்திய அனைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்ப்புதல் அளித்துள்ளார்.
 
ஆனாலும் இதற்கெல்லாம் பயப்படாத சில அயோக்கியன்கள் தொடர்ந்து குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்களை அளித்து வருகின்றனர்.
 
ஒடிசாவை சேர்ந்த 6 வயது சிறுமியான ஷீபா, தனது தாயிடம் பிஸ்கட் வேண்டுமென கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த தாய் குழந்தையிடம் காசு கொடுத்து, கடையில் போய் பிஸ்கட் வாங்கிக்கோ என கூறியுள்ளார்.
 
கடைவீதிக்கு சென்ற சிறுமியிடம், தான் பிஸ்கட் வாங்கித் தருவதாக கூறி, சிறுமி ஷீபாவை மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை அளித்துள்ளான் ஒரு கேடுகெட்ட மனித மிருகம். அத்தோடு நிறுத்தாமல் குழந்தையை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளான். கடைக்கு சென்ற சிறுமி காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், ஊர் முழுவதும் சிறுமியை தேடியுள்ளார்.
பள்ளி வளாகத்திற்குள் சிறுமி ரத்த காயத்தோடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தார். உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் மருத்துவர்கள் சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்
 
இதனையடுத்து அந்த அயோக்கியனை கைது செய்த போலீஸார், அவனை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்