Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்காளத்தில் பயங்கர தீ விபத்து : மக்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 8 ஜூன் 2019 (13:01 IST)
மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ரசாயன குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடிவருகிறார்கள்.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் கொல்கத்தா நகரின் ஜெகன்னாத் காட் பகுதி அருகே ரசாயன குடோன் ஒன்று உள்ளது. இன்று காலை திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தகவலை அறிந்துகொண்டு தீ அணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரமாக தீயை அணைக்க போராடிக்ககொண்டிருக்கின்றனர்.

இதனை குறித்து தீயணைப்பு வீரர் தோப்தானு என்பவர் கட்டிடத்தின் உள்ளே நடுப்பகுதியில் உள்ள மேற்கூரை தீயினால் எரிந்து விழுந்துவிட்டது எனவும், கட்டிடத்தின் உள்ளே எங்களால் போகமுடியவில்லை என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தீயணைப்பு வீரர் தோப்தானு தீயணைப்பு படையினரில் வீரர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பாலியல் வழக்கில் கைதாகிறாரா எடியூரப்பா.? சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை..!!

கள்ளக்காதல் விவகாரம்.! ஓட ஓட விரட்டி பெண் குத்திக் கொலை..!!

ரயில் விபத்துகளுக்கு மோடி அரசின் அலட்சியமே காரணம்! ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

மோடி ஆட்சியில் ரயில் விபத்துகள் அதிகரிப்பு..! ராகுல் காந்தி கண்டனம்.!!

குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியன் வன்கொடுமை: இன்ஸ்டா நண்பரால் விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments