Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 2020 மாத ஜோதிடப் பலன்கள்: தனுசு

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2020 (18:06 IST)
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)

 
உங்கள் திறமைகளை மூலதனமாக கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் தனுசு ராசியினரே நீங்கள் எடுக்கும் காரியங்களில் குறுக்கு வழியை பின்பற்ற மாட்டீர்கள். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் குரு சஞ்சாரத்தால் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் புதனுடன் சேர்க்கை பெறுவதால் எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.
 
தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் குரு பார்ப்பதால் தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவு படுத்து வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். 
 
குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த இறுக்க நிலை மாறும்.
 
பெண்களுக்கு காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும்.
 
கலைத்துறையினருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவீர்கள். ஆடை ஆபரணங்கள் சேரும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு பரிசும், பாராட்டுதல்களும் கிடைக்கும்.
 
அரசியல்துறையினருக்கு பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
 
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.
 
மூலம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.
 
பூராடம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை  தருவதாக இருக்கும். குடும்பத்தில்  சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக  பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். 
 
உத்திராடம்:
இந்த மாதம் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளி தொடர்புகளில் எச்சரிக்கை தேவை. எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும். செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. கவுரவம் உயரும்.
 
பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர மனதில் தைரியம் கூடும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி; 
சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21, 22

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments