Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்றாடம் ஆசனங்கள் செய்வதால் உண்டாகும் பயன்கள்...!!

Webdunia
யோகா பயிற்சிக்கு உரிய காலம் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆகும். இந்த நேரத்தில் இயற்கைச் சூழ்நிலை அமைதியுடனும் சூரிய காந்த அலைகள் நிரம்பியதாகவும் இருக்கும். காலையில் வெறும் வயிற்றோடு ஆசனங்களை செய்யவேண்டும். 
காலை கடன்களை முடித்துவிட்டு 10 நிமிடம் கழித்து ஆசனங்களை செய்யத் துவங்கவேண்டும். குளிப்பதற்கு முன்போ அல்லது பின்போ ஆசனங்களை செய்யலாம். ஆனால் கட்டாயம் அரைமணி நேரம் இடைவெளி இருப்பது அவசியம். குளிர்ந்த நீரில் குளித்த பிறகு ஆசன பயிற்சி  செய்தால், உடலை வளைப்பதற்கு சுலபமாக இருக்கும்.
 
பயிற்சியை வெறும் தரையில் செய்யக்கூடாது. மேடு பள்ளம் இல்லாத தரையில் போர்வை அல்லது யோகா மேட் விரித்து அதன் மேல் தான்  பயிற்சி செய்யவேண்டும். இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு ஆசனாங்களை செய்யக்கூடாது. உடலின் அசைவுகள் இயல்பாக இருக்க  தளர்வான ஆடைகளை அணிந்து செய்வது நல்லது.
 
ஆசனங்களை வேகமாக அவசரத்துடன் செய்யக்கூடாது. நிதானமாக உடல், மனம் மூச்சி இவை மூன்றும் ஒன்றித்த நிலையில் ஆசனங்களை  செய்ய முயற்சிக்கவேண்டும்.
 
ஆரம்பத்தில் குறைந்த நேரமும், பிறகு அதிக நேரமும் பயிற்சி செய்யலாம். ஒரு ஆசனத்தை செய்த பிறகு அடுத்த ஆசனத்தை செய்வதற்கு 15  அல்லது 20 வினாடி (4 முதல் 5 மூச்சு) ஓய்வு கொள்ள வேண்டும். இவற்றை மனதில் நிறுத்தி ஆசனங்களை செய்தால் மட்டுமே முழு பலன்  கிடைக்கும். அன்றாடம் சில நிமிடங்கள் தவறாமல் யோககலையை பயிற்சி செய்து வந்தாலே போதும் நம் உடல் ஆரோக்கியத்துடன்  வாழலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments