பாபா ராம்தே‌வ், சத்குரு கூ‌ட்டாக அருளுரை

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2011 (20:20 IST)
பதஞ்சலி யோகாவை சேர்ந்த பாபா ராம்தேவ் அவர்களும், ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு அவர்களும் கோவை வ.உ.சி மைதானத்தில் பொதுமக்களுக்கு அருளுரை வழங்கினர்.
WD

முன்னதாக கோவை மக்களுக்கு இலவச யோகா நிகழ்ச்சி வழங்க ி‌ப் பேசிய பாபா ராம்தேவ் அவர்கள் இன்றைய சமூக நீரோட்டத்திற்கு ஆன்மீகம் எவ்வளவு முக்கியம் என்பதனை வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சி காலை 5 மணியிலிருந்து 7.30 மணி வரை நடைபெற்றது.

யோகா நிகழ்ச்சி நிறைவுற்றபின் உரை நிகழ்த்திய ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, பாபா ராம்தேவ் அவர்கள் இந்த சமூகத்திற்கு ஆற்றி வரும் அற்புதமான பணிகளை பற்றியும், யோகா என்றால் என்ன என்றே அறியாதவருக்கும் யோகாவை பாபாஜி அறிமுகப்படுத்தியுள்ள பாங்கையும் பற்றி பேசினார்.

தொடர்ந்து பேசிய சத்குரு அவர்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சொட்டு ஆன்மீகமாவது சென்று சேர வேண்டும். இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் ஆன்மீகம் என்பது அத்தியாவசிய தேவை என்பதனையும் வலியுறுத்தினார்.

விழாவின் நிறைவாக சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விடியற்காலையிலே வந்து ஆர்வத்துடன் இந்நிகழச்சியில் பங்கெடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சி "ஆஸ்தா" தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்பட்டது.

மேலும் தகவல்களுக்கு
பாலசந்திரன்
94426 41563

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

கண்ணில் ரத்தக் கசிவு: நீரிழிவு, இரத்த அழுத்தம் காரணமா?

ஒல்லியானவர்களுக்கு கூட கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஏற்படுவது ஏன்?

உணவில் அடிக்கடி அவரைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

நல்லெண்ணெய்: மூட்டு ஆரோக்கியத்திற்கும் உடல் நலனுக்கும் ஒரு வரம்!

Show comments