Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுக‌ப் ‌பிரசவ‌த்‌தி‌ற்கு யோகா ப‌யி‌ற்‌சி

Webdunia
புதன், 28 அக்டோபர் 2009 (11:47 IST)
த‌ற்போது சுக‌ப்‌பிரசவ‌ங்க‌ள் குறை‌ந்து‌வி‌ட்டன. ‌அறுவை ‌சி‌‌கி‌ச்சை மூல‌ம் குழ‌ந்தை பெறுவது அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல், எ‌வ்‌வித கஷ்டமும் இல்லாமல் சுகப்பிரசவம் நடைபெற கர்ப்பிணி பெண்களுக்கு செ‌ன்னை‌யி‌ல் யோக பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

webdunia photo
WD
20 ஆ‌ண்டுகளு‌க்கு முன்பு ஒருசில பெண்களுக்குதான் அறுவை (சிசேரியன்) சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறப்பது உண்டு. ஆனால் இப்போது அந்த நிலை மாறி ஒரு ‌சிலரு‌க்கு‌த்தா‌ன் சுக‌ப்‌பிரசவ‌த்‌தி‌ல் குழ‌ந்தை ‌பிற‌க்‌கிறது. எனவே சிசேரியனை தவிர்த்து எந்தவித கஷ்டமும் இன்றி சுகமாக பிரசவம் நடைபெற சென்னை மாநகராட்சி மருத‌்துவமனை‌க்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தை பெற்ற பெண்களுக்கும் யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி அளிக்கும் தொடக்க விழா நேற்று செனாய் நகரில் உள்ள 24 மணிநேர மாநகராட்சியின் அவசரகால பிரசவ மரு‌த்துவமனைய‌ி‌ல் நடைபெற்றது.

யோகா குறித்து மாவட்ட குடும்ப நல அதிகாரி மரு‌த்துவ‌ர் பானுமதி க ூறுகை‌யி‌ல், கர்ப்பிணி பெண்களுக்கு வாரத்திற்கு இரு முறை அதாவது செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 9 முதல் 12 மணிவரை யோகா மற்றும் மூச்சு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனால் அந்த பெண்களுக்கு நிறைய ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதனால் அவர்களும், வயிற்றில் உள்ள குழந்தைகளும் ஆரோக்கியமாக வாழ முடியும்.

கை, கால்களை அசைக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனால் மனம் அமைதியாக இருக்கும். மன உளைச்சல் முற்றிலுமாக அகற்றப்பட்டு நல்ல மனத்துடன் குழந்தை பிறக்கும். பிரசவ பயமும் அகலும். ஆரோக்கியம் கூடுவதால் அனாவசிய செலவு குறைக்கப்படுகிறது. பிரசவத்தின் போது சுகமான பிரசவம் நடைபெறும். அறுவை சிகிச்சை செய்யாமல் குழந்தை பிறக்க இது வழி வகுக்கும். எல்லா கர்ப்பிணி பெண்களும் யோகா பயிற்சி பெறலாம் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

Show comments