Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலை மீது தாக்குதல் – சவுதியில் பதற்றம் !

Webdunia
சனி, 14 செப்டம்பர் 2019 (13:39 IST)
சவுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இன்று தாக்குதல் நடந்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள புக்கியாக் நகரில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது இன்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக சூழப்ப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதல் நடத்தப்பட்ட ஆலைதான் உலகிலேயே மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு சுமார் 7 மில்லியன் லிட்டர் எண்ணெய் அங்கு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்த தாக்குதலால் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments