Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸிக்கா வைரஸ்: பிரேசிலில் மேலும் 5 குழந்தைகள் உயிரிழப்பு

ஸிக்கா வைரஸ்: பிரேசிலில் மேலும் 5 குழந்தைகள் உயிரிழப்பு
, வியாழன், 21 ஜனவரி 2016 (16:16 IST)
பிரேசில் நாட்டில் ஸிக்கா வைரஸ் தாக்கி மேலும் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.


 

 
பிரேசிலில், 224 பேருக்கு ஸிக்கா வைரஸ் நோய் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் அந்நாட்டில் மேலும் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இந்த வைரஸ் கருவில் உள்ள குழந்தைகளின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துதல், பெருமூளை வாதம், கண் பார்வை இழத்தல் மற்றும் கேட்கும் திறன் குறைதல் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக பிரேசில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
 
கடந்த 2014 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா முதல் தென்அமெரிக்கா வரை ஏடிஸ் ஏகிப்தி (Aedes aegypti) என்ற கொசு மூலம் இந்த ஸிக்கா வைரஸ் நோய் பரவியுள்ளதாக கூறப்படுகின்றது.
 
பிரேசிலில் இதுவரை 3,893 பேருக்கு மர்ம காய்ச்சல் தாக்கியுள்ளது. இது குறித்து விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது.
 
கடந்த சில ஆண்டுகளாக எபோலா, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட புதிய வகை நோய்கள் உலகம் முழுவதும் உள்ள மக்களை பயமுறுத்தி வருகின்றன.
 
இந்நிலையில், இத்தகைய நோய்கள் திட்டமிட்டே பரப்பப்படுவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil