Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரம்போடு முட்டிக் கொண்ட ஜெலன்ஸ்கி! ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா! - உக்ரைன் நிலைமை என்ன?

Prasanth Karthick
செவ்வாய், 4 மார்ச் 2025 (09:22 IST)

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, உக்ரைக்கு வழங்கப்பட்டு வந்த ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

 

ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைய எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடர்ந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடரும் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

 

நேட்டோவில் இணையும் முயற்சியை உக்ரைன் கைவிட்டால் போரை நிறுத்துவதாக ரஷ்யா கூறும் நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதை ஏற்க மறுத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேசிய டொனால்டு ட்ரம்ப் உக்ரைனுக்கு எதிராகவும் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

கடந்த வாரம் அமெரிக்காவில் ட்ரம்ப்பை சந்தித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில்தான் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்திக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால் ரஷ்யா மீதான போரில் உக்ரைனுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். இதனால் ரஷ்யாவின் கட்டுப்பாடுகளுக்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்தால் ஒழிய போர் நிறுத்தம் ஏற்படாது என்ற சூழலும் ஏற்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய்.. எங்கே எப்போது?

தமிழக முதல்வர் தாயார் தாயார் தயாளு அம்மாளுக்கு மூச்சு திணறல்.. மருத்துவமனையில் அனுமதி..!

தனிமை சிறையில் இம்ரான் கான்.. மனைவி சந்திக்க கூட அனுமதி மறுப்பு..!

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் இன்று முதல் தாம்பரம் வராது.. என்ன காரணம்?

அடுத்தடுத்து இரு சிறுமிகளை கடித்துக் குதறிய தெரு நாய்கள்.. வந்தவாசியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments