Webdunia - Bharat's app for daily news and videos

Install App

57 முறை காதலியை கத்தியால் குத்திய இளைஞர்: சிறையில் எடை அதிகரித்ததால் விடுதலை..!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (17:04 IST)
இத்தாலி நாட்டில் 57 முறை காதலியை கத்தியால் குத்திய இளைஞர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சிறையில் அவரது உடல் எடை அதிகரித்ததன் காரணமாக அவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  

இத்தாலி நாட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலியை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவர் 57 முறை காதலியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த நிலையில் அவரை காவல்துறையினர் சிறையில் அடைத்த நிலையில் சிறையில் அவரது உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.

30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவர் தன்னுடைய எடை  120 கிலோவாக இருந்த நிலையில் ஒரே ஆண்டில் 200 கிலோவாக அதிகரித்தது என்றும் தனது உடல் எடையை குறைக்கும் வகையில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அவருக்கு கலோரிகள் குறைவான உணவை வழங்க சிறையில் வழியில்லை என்பதால் அவர் வீட்டு காவலில் வைத்து, கலோரிகள் குறைவான உணவை உட்கொள்ள நீதிமன்றம் அனுமதித்தது. இதனை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதிகள் துறவி போல் வாழ வேண்டும், சமூக ஊடகத்தில் கருத்து சொல்ல கூடாது: சுப்ரீம் கோர்ட்

ஒரே நாளில் 1200 புள்ளிகள் சரிந்து 843 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!

பிரியங்கா காந்தியின் முதல் பாராளுமன்ற உரை.. என்ன பேசினார்..!

சபரிமலையில் தொடர் கனமழை.. பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடையா?

அடுத்த கட்டுரையில்
Show comments