Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாலிவுட் நடிகை டெமி மூரின் வீட்டு நீச்சல் குளத்தில் மிதந்த 21 வயது வாலிபர்

ஹாலிவுட்  நடிகை டெமி மூரின் வீட்டு நீச்சல் குளத்தில் மிதந்த 21 வயது வாலிபர்
, செவ்வாய், 21 ஜூலை 2015 (02:31 IST)
பிரபல ஹாலிவுட் நடிகை டெமி மூரின் வீட்டு நீச்சல் குளத்தில் 21 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் மர்மான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
பிரபல ஹாலிவுட் நடிகை டெமி மூர். இவர் சொகுசு நிறைந்த பங்களாவில் வசித்து வருகின்றார். இந்தச் சொகுசு வீட்டில் அழகிய நீச்சல் குளமும் உள்ளது.
 
இந்நிலையில், ரிஎடெனில்சன் வேல்லே (21) என்ற இளைஞர் அந்த நீச்சல் குளத்தில் விழுந்து இறந்துள்ளார். அவர் போதையில் இறந்திருக்காலம் என கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நடந்தபோது டெமி மூர் மற்றும் அவரது குழந்தைகள் வெளியூர் சென்றிருந்தனர்.
 
webdunia

 
இந்நிலையில், தனது வீட்டு நீச்சல் குளத்தில் இறந்துபோன வாலிபருக்கு நடிகை டெமி மூர் ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த மரணம் குறித்து லாஸ் ஏஞ்செல்ஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil