Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''உங்கள் தானம் போதும்!'' 550 குழந்தைகளுக்கு தந்தையான நபருக்கு நீதிமன்றம் உத்தரவு

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (22:00 IST)
நெதர்லாந்து நாட்டைச் சேர்ன்ட ஒரு நபர்  செயற்கை கருத்தரிப்பிற்கு என விந்தணு தானம் மூலம்  550 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகெங்கிலும் செயற்கை கருத்தருப்பிற்கு என ஆண்கள் விந்தணுவை தானம் செய்து வருகின்றனர். இதுகுறித்த சினிமா படங்கள் கூட வெளியானது.

இந்த நிலையில் நெதர்லாந்து நாட்டில் செயற்கைக் கருத்தரிப்பு விதிகளின்படி,  ஓரே நபர் 12 க்கும் அதிகமான பெண்கள் கருத்தரிக்க காரணமாக இருக்ககூடாது என்பதாகும்.

ஆனால்,  அந்த நாட்டைச் சேர்ந்த ஜோனாதான் ஜேக்கப் மெய்ஜர் (41). கடந்த 2007 ஆம் ஆண்டு விந்தணு தானம் செய்து வருகிறார். இதை தொழிலாகவும் செய்தது வரும் அவர், அந்த நாட்டின் செயற்கைக் கருத்தரிப்பு விதிகளை மீறி ( ஒரே நபர் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாக இருக்ககூடாது). 13 மையங்களில் விந்தணுக்கள் தானம் செய்து, இதுவரை  550 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார்.

இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளியன்று, நீதிபதி ஹெஸ்ஸலிங் இத்தீர்ப்பளிக்கப்பட்ட நாளில் இருந்து இனிமேல் விந்தணு தானம் அளிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments