Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்னஞ்சல் கணக்குகளை உளவு பார்க்கும் யாகூ! பயனர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (12:40 IST)
அமெரிக்காவில் இயங்கி வரும் யாகூ நிறுவனம், தனது பயனாளர்களின் மின்னஞ்சல் கணக்குகளை உளவு பார்த்து வருவதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

 
உலகின் முண்ணனி இணையதள சேவை நிறுவனமான யாகூ, சமீபகாலமாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் யாகூவில் மின்னஞ்சல் கணக்குகளை வைத்திருக்கும் பயனாளர்களை, அந்நிறுவனம் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கென மென்பொருள் ஒன்றையும் அந்த நிறுவனம் உருவாக்கியுள்ளதாக தெரிகிறது.
 
யாகூ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் இருவர் மூலம் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க, யாகூ நிறுவனம் இதை செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
 
தங்களுக்கு இது போன்ற கோரிக்கைகள் வரவில்லை எனவும், அப்படி வந்தால் அதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனவும் கூகுள், பேஸ்புக், டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 
வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

தாயை கொலை செய்து உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்ட மகன்: மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!

இன்று மகாளய அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் குவிந்த பக்தர்கள்

மீண்டும் 400 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

3 நாட்கள் பட்டினியால் உயிரிழப்பு.. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments