Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவை முந்திய பிரேசில், 3வது இடத்தில் இந்தியா: ஒருநாள் உலக கொரோனா விபரம்

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (06:58 IST)
உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை 74,45,945 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,18,137 ஆகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 37,25,628 ஆகவும் உள்ளது. 
 
உலக நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இதுவரை அமெரிக்காவே முதலிடத்தில் இருந்த நிலையில் நேற்று பிரேசில் முதலிடத்தை பிடித்துள்ளது. அந்நாட்டில் நேற்று மட்டும் ஒரே நாளில் 33,100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 
 
2வது இடத்தில் உள்ள அமெரிக்காவில் 20,674 பேர்கள் கொரோனாவால் பாதிக்கபப்ட்டுள்ள நிலையில் இந்தியாவில் 12,375 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானதால் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் நேற்று மட்டும் பிரேசில் நாட்டில் 1300 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் 982 பேர்களும், இந்தியாவில் 388 பேர்களும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் நேற்று ஒரே நாளில் சிலியில் 5,737 பேர்களும், பெருவில் 5,087 பேர்களும், , பாகிஸ்தானில் 5,385 பேர்களும், செளதி அரேபியாவில் 3,717 பேர்களும், வங்கதேசத்தில் 3,190 பேர்களும், தென்னாப்பிரிக்காவில் 2430 பேர்களும், ஈரானில் 2011 பேர்களும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments