Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடலுக்கடியில் உலகின் முதல் மிதக்கும் சுரங்கப்பாதை: நார்வே பிரம்மாண்டம்

கடலுக்கடியில் உலகின் முதல் மிதக்கும் சுரங்கப்பாதை: நார்வே பிரம்மாண்டம்

கடலுக்கடியில் உலகின் முதல் மிதக்கும் சுரங்கப்பாதை: நார்வே பிரம்மாண்டம்
, வியாழன், 28 ஜூலை 2016 (15:48 IST)
உலகின் முதல் மிதக்கும் சுரங்கப்பாதை நார்வே நாட்டில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வுகள் நிறைவடைந்து விட்டதை அடுத்து இந்த திட்டம் விரைவுப்படுத்தப்பட்டிருக்கிறது.



நார்வே நாட்டின் இ39 நெடுஞ்சாலையில் உள்ள கிறிஸ்டியன்சான்ட் மற்றும் டிரோன்டீம் என்ற இடங்களுக்கு இடையில் இரு நிலத்திட்டுகளுக்கு இடையே குறுகிய கடல் பகுதியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக ஒப்பேடல் மற்றும் லாவிக் என்ற இரண்டு நிலப்பகுதிகளுக்கு இடையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.

இந்த மிதக்கும் பாலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் இல்லாமல் 4,000 அடி நீளமுடைய ராட்சத கான்கிரீட் குழாய்களை நீருக்கடியில் அமைத்து, அதனை பலூன் போன்ற மிதவைகளில் இணைத்து தொங்கவிடப்பட உள்ளது.

இரண்டு ராட்சத கான்கிரீட் குழாய்களுடன் இந்த சுரங்கப்பாதை நீளும், ஒவ்வொரு சுரங்கப்பாதை குழாயிலும் இரண்டு வழித்தடங்கள் இருக்கும். ஒன்று போக்குவரத்திற்கும், ஒன்று அவசர காலத்திற்கும் பயன்படுத்தப்படும்.

இந்த சுரங்கப்பாதை நீருக்கடியில் 65 அடி முதல் 100 அடி ஆழத்தில் அமைக்கப்பட உள்ளது. இதனால், இந்த பகுதியில் கப்பல்கள் கடந்து செல்வதற்கும் எந்தவொரு சிக்கலும் இருக்காது.

இந்த மிதக்கும் சுரங்கப்பாதை அமைப்பதற்கு 19 பில்லியன் டாலர் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அது 25 மில்லியன் டாலர் வரை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

7 முதல் 9 ஆண்டுகளில் மிதக்கும் சுரங்கப்பாதை அமைக்கப்படும். மேலும், 2035ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

14 வயது சிறுமியை பணத்துக்காக விற்ற கணவன்