உலகளவில் கொரோனா தொற்று 2.22 கோடியாக அதிகரிப்பு: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (07:36 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 2.02 கோடியாக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 2.2 கோடியாக உயர்ந்துள்ளது. உலக அளவில் தினமும் லட்சக்கணக்கில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது
 
சற்றுமுன் வெளியான தகவலின்படி  உலகில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,304,310 என உயர்ந்துள்ளது. மேலும் உலகில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 784,319 என்பதும் குணமானவர்களின் எண்ணிக்கை 15,044,682 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
உலகில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் மொத்தம் 5,655,974 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 175,074 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிரேசிலில் மொத்தம் 3,411,872 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 110,019பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்
 
மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 2,766,626 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 53,014 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்கா, பிரேசில், இந்தியாவை அடுத்து ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, பெரு, மெக்சிகோ, கொலம்பியா, சிலி மற்றும் ஸ்பெயின் நாடுகள் கொரோனா பாதிப்பில் முதல் பத்து இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments