Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுக்கி தண்டவாளத்தில் விழுந்த பெண்; கூட்டமாய் ரயிலை நிறுத்திய மக்கள் – வைரலான வீடியோ!

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (16:54 IST)
அர்ஜெண்டினாவில் பெண் ஒருவர் தவறி விழுந்துவிட அவரை காப்பாற்றுவதற்காக மொத்த மக்களும் ரயிலை நிறுத்த முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அர்ஜெண்டினாவில் உள்ள ரயில் சுரங்கபாதை ஒன்றில் பிளாட்பாரத்தில் மக்கள் பலர் ரயிலுக்காக காத்து கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது ஒரு பெண்ணுக்கு பின்னால் நின்ற நபர் தடுமாறி அந்த பெண் மேல் விழ அவர் நிலை தடுமாறி பிளாட்பாரத்திலிருந்து ரயில் வரும் ட்ராக்கில் விழுந்துவிட்டார்.

பின்பக்கமாக விழுந்ததால் தலை ட்ராக்கில் அடிப்பட்டு மயக்கமடைந்தார் அந்த பெண். அவர் விழுந்த சில வினாடிகளிலேயே அந்த ஸ்டேசனுக்கு வர வேண்டிய ரயில் ஸ்டேசனுக்குள்ளே புகுந்தது. உடனே பிளாட்பாரத்தில் நின்ற மக்கள் தங்கள் கைகளை அசைத்தும், கைகளில் வைத்திருந்த பைகளை ரயில் முன்னே உயர்த்தி காட்டியும் ரயிலை நிறுத்த முயற்சித்தார்கள்.

மக்கள் ரயிலை குறுக்கே மறிப்பதை கண்டு ஏதோ அசம்பாவிதம் என்று உஷாரான டிரைவர் உடனே வேகத்தை குறைத்து ரயிலை நிறுத்தினார். உடனே இளைஞர்கள் சிலர் ட்ராக்கில் குதித்து அந்த பெண்ணை மீட்டு கொண்டு வந்தனர். அனைத்து மக்களும் மனித உணர்வோடு உடனடியாக செயல்பட்டதால் அந்த பெண் காப்பாற்றப்பட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments