Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாறையை திருமணம் செய்து கொண்ட பெண் : இங்கிலாந்தில் வினோதம்

பாறையை திருமணம் செய்து கொண்ட பெண் : இங்கிலாந்தில் வினோதம்
, சனி, 26 மார்ச் 2016 (15:11 IST)
பாறைகளின் மீது ஏற்பட்ட அதீத ஈர்ப்பால், ஒரு அழகிய பாறையை ஒரு பெண்மணி திருமணம் செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இங்கிலாந்து நாட்டின் பிரபலமான கலைஞர் டிராசி எமின்(51). இவருக்கு  பாறைகள் என்றால் மிகவும் பிரியம். ஹாங்ஹாங்கில், ஒரு கண்காட்சியில் உள்ள பண்டைய கால பாறைகளைப் பார்த்த பிறகுதான் இவருக்கு பாறைகளின் மீது அதீத காதல் ஏற்பட்டுள்ளது.
 
இதனால், தனிமையில் வாழ்ந்து வந்த அவர் தற்போது ஒரு பாறையை திருமணம் செய்துள்ளதாக, உலகுக்கு அறிவித்துள்ளார். அவர் கூறும்போது “நான் தனியாக இல்லை.ஒரு பாறையை திருமணம் செய்துகொண்டு அதனுடன் தான் வாழ்ந்து வருகிறேன். அந்த பாறை மிகவும் அழகானது. அந்த பாறை என்னுடனே எப்போதும் இருக்கும். மேலும் எனக்காக அது காத்திருக்கும்” என்று கூறியுள்ளார். 

webdunia

 

 
மேலும் “ பாறையை திருமணம் செய்து கொண்ட பிறகு, காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நான் ஆர்வமாக இருக்கிறேன்” என்று டிராசி எமின் கூறியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil