Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணி மரணத்தால் நடந்த நன்மை: ஒன்றிணைந்த அண்ணன் –தம்பி!

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (09:22 IST)
சகோதரர்கள் இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி தங்களது மனைவிகள் கேட் மற்றும் மேகன் ஆகியோர் ஒன்றாக காட்சியளித்தனர்.


வில்லியம் மற்றும் ஹாரி, கேட் மற்றும் மேகன் ஒரு காலத்தில் "Fab Four" என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் ஒன்றாக இளைய தலைமுறையினருக்கு முடியாட்சியின் முறையீட்டைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் இருந்தனர்.

ஆனால் 2018 ஆம் ஆண்டு விண்ட்சரில், அமெரிக்க தொலைக்காட்சி நடிகையான மேகனுடன் முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ கேப்டன் ஹாரியின் திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கிடையேயான உறவுகள் மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு ஜோடிகள் ஒன்றாக இருப்பதைப் பார்ப்பது அறிதாகிவிட்டது.

37 வயதான ஹாரி, தானும் தனது சகோதரனும் வெவ்வேறு பாதையில் இருப்பதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். தானும் 41 வயதான மேகனும் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரச வாழ்க்கையை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். இரண்டு ஜோடிகளும் கடைசியாக 2020 இல் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த நிகழ்வில் ஒன்றாகக் காணப்பட்டனர்.

ஜூன் மாதம் ராணியின் பிளாட்டினம் விழா கொண்டாட்டத்தின் போதும் அவர்கள் சந்திக்கவில்லை. இந்நிலையில் பாட்டியின் மரணத்திற்குப் பிறகு இப்போது ஒற்றுமையாக காணப்படுகின்றனர். ஆம், ராணி எலிசபத்தின் நினைவாக எஸ்டேட் வாசலில் வைக்கப்பட்ட மலர்வளையங்களை பார்வையிட நால்வரும் ஒன்றாக காட்சியளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments