Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலநிலை மாற்றத்துக்கு தடுப்பூசி கிடையாது; பற்றி எரியும் காடுகள்! – உலக சுகாதார அமைப்பு வேதனை!

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (12:34 IST)
பல நாடுகளில் சில காலமாக அதிகரித்துள்ள காட்டுத்தீயால் ஏற்படும் காலநிலை மாற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

உலகில் காலநிலை மாற்றம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக துருக்கி, க்ரீஸ், அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளது. இதனால் உலகின் வெப்பநிலை அதிகரித்து காலநிலை மாற்றம் துரிதப்படுத்தப்படுவதாக ஐபிசிசி வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “கடந்த சில வாரங்களில், பேரழிவு தரும் காட்டுத்தீ உலகின் பல நாடுகளை சேர்ந்த மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. இனியும் நாம் வழக்கம்போல நமது வேலையைத் தொடர்ந்தால், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயங்கள் எந்தவொரு நோயைவிடவும் அதிகமாகும். நாம் கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவோம், ஆனால் காலநிலை நெருக்கடிக்கு தடுப்பூசி இல்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments