Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு மீண்டும் அனுமதி! உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (07:17 IST)
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்தாகக் கொடுக்கப்பட்டு வரும் ஹைட்ராக்ஸ் குளோரோகுயின் மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் தற்காலிக தடை விதித்திருந்த நிலையில் இப்போது மீண்டும் அதற்கு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு பொதுவான ஒரு தடுப்பு மருந்து இல்லாத நிலையில் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு முறைகள் பின்பற்ற படுகின்றன. அவற்றில் பெரும்பாலும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் என்ற மலேரியாவுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை ஏராளமாக இந்தியாவிடம் இருந்து அடாவடியாக வாங்கி பயன்படுத்தி வருகிறது அமெரிக்கா.

இப்போது இந்த மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது. இதை WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நேற்று (மே 25) நடந்த காணொலி பத்திரிகையாளர் சந்திப்பின் போது ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பெறும் நோயாளிகள் மற்ற கொரோனா வைரஸ் நோயாளிகளை விட அதிக விகிதத்தில் இறந்து கொண்டிருப்பதாக மருத்துவ இதழான தி லான்செட் கடந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. பல நோயாளிகளிடம் நடத்திய ஆய்வுகளின் மூலம் இந்த முடிவை வெளியிட்டுள்ளது.’ எனக் கூறியுள்ளார். இந்த செய்தியானது மக்களிடம் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இப்போது மீண்டும் அந்த மருந்தைப் பயன்படுத்த சொல்லி, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments