Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்த நாட்டு மக்கள் அதிகளவில் இணையம் பயண்படுத்துகிறார்கள்?

எந்த நாட்டு மக்கள் அதிகளவில் இணையம் பயண்படுத்துகிறார்கள்?
, புதன், 29 ஜூலை 2015 (15:58 IST)
எந்த நாட்டு மக்கள் அதிக சதவிகத அளவில் இணையம் பயண்படுத்துகிறார்கள் என்பது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 

 
இந்த அறிக்கையை 2015ஆம் ஆண்டிற்கான உலக பொருளாதார மன்றத்தின் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப அமைப்பு தயாரித்துள்ளது. இந்த தரவரிசைப் பட்டியல், 143 வகையான பொருளாதார வகைமைகளின் அளவுகோளின் படி தயாரிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், அவர்கள் எந்த அளவிற்கு பொருளாதார வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் ஊக்குவிக்கும் வகையில் தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறார் என்ற அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
 
அதன்படி, ஐஸ்லாந்து 96.5 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. நார்வே 95.1 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்திலும், ஸ்வீடன் 94.8 சதவிகதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
 
முதல் பத்து இடங்களின் பட்டியல்:
 
1. ஐஸ்லாந்து - 96.5 %
2. நார்வே - 95.1 %
3. ஸ்வீடன் - 94.8 %
4. டென்மார்க் - 94.6 %
5. நெதர்லாந்து - 94.0 %
6. லுக்ஸம்பர்க் - 93.8 %
7. ஃபின்லாந்து - 91.5 %
8. பஹ்ரைன் - 90.0 %
9. இங்கிலாத்து - 89.8 %
10. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - 88.0 %
 
முதல் 10 இடங்கள் கொண்ட இந்தப் பட்டியலில் ஐரோப்பிய நாடுகளைத் தவிர, பஹ்ரைன் [8ஆவது இடம்] மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் [10ஆவது இடம்] ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil