Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னும் சில வாரங்களில் வாட்ஸ்அப்பிற்கு தடை?

இன்னும் சில வாரங்களில் வாட்ஸ்அப்பிற்கு தடை?
, சனி, 11 ஜூலை 2015 (16:05 IST)
உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப்பிற்கு விரைவில் இங்கிலாந்தில் தடை செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 

 
மறைமுக குறியீடுகள் கொண்ட எந்த வகையிலான குறுஞ்செய்திகளை அனுப்பவும் தடைவிதிக்கும் புதிய சட்டத்தை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் விரைவில் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இங்கிலாந்தில் அண்மையில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலையடுத்து அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் பயங்கரவாதம் பரவாமல் இருப்பதற்காக கடுமையான சட்டங்களை இயற்ற உள்ளதாக கூறப்படுகிறது. ஆன்லைன் கம்யூனிகேஷன் வசதிகளே பயங்கரவாதிகள் எளிதாக தகவல் பறிமாறிக்கொள்ள ஏதுவாக இருப்பதாகவும், எனவே இங்கிலாந்து புலனாய்வுத் துறை ஆன்லைன் கம்யூனிகேஷன் வசதிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த சட்டம் அமலுக்கு வந்தால் ஸ்நாப்சாட், ஆப்பிள் நிறுவனத்தின் ஐமெசேஜ், வாட்ஸ்அப் போன்றவைகளுக்கு இங்கிலாந்தில் நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மக்களின் தனிபட்ட உரிமையை பாதிப்பதாக இங்கிலாந்தில் இந்த புதிய சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil