Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிபர் பதவிக்கு என்ன குணம் இருக்க வேண்டும் ? - ஹிலாரி கிளிண்டன் விளக்கம்

அதிபர் பதவிக்கு என்ன குணம் இருக்க வேண்டும் ? - ஹிலாரி கிளிண்டன் விளக்கம்

அதிபர் பதவிக்கு என்ன குணம் இருக்க வேண்டும் ? - ஹிலாரி கிளிண்டன் விளக்கம்
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (02:02 IST)
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைவதையொட்டி, வரும் நவம்பர் 8-ம் தேதி புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.


 


இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சியின் சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இரு அதிபர் வேட்பாளர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனிடையே அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் டொனால்ட் டிரம்ப். அவரின் சர்ச்சை பேச்சுக்கு பதில் அளித்து பேசிய ஹிலாரி கிளிண்டன், ”வார்த்தைகள் மிக முக்கியமானவை.

அதிபருக்கான போட்டியில் இருக்கும் போதோ அல்லது அமெரிக்காவின் அதிபராக இருந்தாலோ, நீங்கள் வெளியிடும் வார்த்தைகள் பல பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும். டொனால்ட் டிரம்பின் இது போன்ற ஒவ்வொரு சர்ச்சைக்குரிய சம்பவங்களும் அவர் அதிபர் பதவிக்கான குணத்தை கொண்டிருக்கவில்லை என்பதை காட்டுகிறது” என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டுவிட்டரில் கலக்கும் சுஷ்மா!