Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாளத்தில் 1 லிட்டர் தண்ணீர் 150 ரூபாய்க்கு விற்பனை

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (13:18 IST)
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் 1 லிட்டர் தண்ணீர் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாள நாட்டின் மையப்பகுதியில் உள்ள லாம்ஜங் மாவட்டத்தில் சனிக்கிழமை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.9 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் நேபாளம் முழுவதும் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாகின.
 
இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 4300 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்புபப் பணிகள் 3 ஆவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
 
இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் தரைமட்டமாகியுள்ளன. பொது மக்கள் பயத்துடன் தொடர்ந்து சாலைகளில் வசித்துவருகின்றனர்.
 
இந்நிலையில் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அங்கு 1 லிட்டர் தண்ணீர் ரூ.150 க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இது அம்மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

Show comments