Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜபக்‌சே வழங்கிய நகைகள் போலியானவையா? முன்னாள் போராளி கடிதம்

Webdunia
சனி, 20 ஜூன் 2015 (20:09 IST)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில் பரிசளிக்கப்பட்ட தங்க நகைகள் கறுத்துவிட்டதாக, முன்னாள் போராளியொருவர் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
 
வடமாகாண சபையும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து நடத்தும் மக்கள் குறை தீர்க்கும் நடமாடும் சேவை, பாலிநகர் மகா வித்தியாலய மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போதே முன்னாள் போராளி ஒருவர் வடமாகாண அமைச்சர் ஒருவரிடம் இந்தக் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் ஏற்பாட்டில் புனர்வாழ்வு முகாம் ஒன்றில் முன்னாள் போராளிகளான 53 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. அப்போது, ஜோடிகளுக்கு தங்கச் சங்கிலியும் பரிசளிக்கப்பட்டது.
 
தங்கச் சங்கிலிகள் என்று அன்று வழங்கப்பட்ட நகைகள் பித்தளை எனவும் அவை, சில மாதங்களிலேயே கருத்துவிட்டன என்றும்  முன்னாள் போராளி, தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருமணத்தின் போது கூறப்பட்ட எவ்வித உதவிகளும் இதுவரையில் தங்களுக்குச் வழங்கப்படவில்லை எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments