Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பில் கேட்ஸ் மொத்த சொத்தையும் செலவிட 218 ஆண்டுகளாகும்

பில் கேட்ஸ் மொத்த சொத்தையும் செலவிட 218 ஆண்டுகளாகும்
, சனி, 1 நவம்பர் 2014 (12:37 IST)
பில் கேட்ஸ் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் டாலர் செலவு செய்தாலும் அவரது மொத்த சொத்து மதிப்பை தீர்க்க 218 ஆண்டுகள் ஆகும் என ஆய்வு நிறூவனம் தெரிவித்துள்ளது.
 
சமீபத்தில் இது குறித்து ஆக்ஸ்பாம் நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் டாலர் செலவு செய்தாலும் அவரது மொத்த சொத்து மதிப்பை தீர்க்க 218 ஆண்டுகள் ஆகும் என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
 
ஆக்ஸ்பாம் நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில், இதே போல் உலக செல்வந்தர்களுள் ஒருவரான கார்லோஸ் ஸ்லிம், ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் டாலர் என்ற கணக்கில் செலவிட்டால் அவரது சொத்து மதிப்பை 220 ஆண்டுகளில் செலவிடமுடியும். வாரன் பப்பெட் இதே முறையில் 169 ஆண்டுகளில் அவரது செல்வத்தை செலவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
 
பொருளாதார மந்த நிலையின் போது உலக பில்லியனர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil