Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களுக்கு வைரஸ் தாக்குதல் ’! உருகும் பாறைகளால் ஆபத்து ..

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (20:23 IST)
பூமியில் வெப்பமயமாதல் அதிகமாகி வருவதால் ஆர்டிக் கடல் பகுதியில் நிறைந்துள்ள பனிப்பாறைகள் உருகி வருவதாக ஏற்கனவே விஞ்ஞானிகள் எச்சரித்தனர். இந்நிலையில், ஆர்டிக் பனிப்பாறைகள் உருகுவதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு வைரல் தாக்குதல் பரவி வருவதாக கடல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மனிதர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் பல புதுமைகளை நிகழ்த்தி புரட்சிக்கு வழிவகுத்துள்ளது. அதில், பிழைக்கவும் ,வாழவும், தொழில் செய்யவும், சொகுசாக இருக்கவும் இன்னும் எத்தனையோ விதமான நடவடிக்கைகளுக்காக, செயல்களுக்காக, அவன் விதவிதமான கண்டுபிடிப்புகளை உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறான்.
 
ஆனால், அவற்றில் நெகிழ் முதற்கொண்டு தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகைகள் வரை அத்துணையிலுமே நச்சுகளும், குளோரோ புளோரோ கார்பனும்,இயற்கைக்கு கேடு விளைவிக்கும் சூழல்களும் மனித செயல்களால் அதிகரித்துள்ளதால், முன்னைவிட நாள்தோறும் சூரிய வெப்பமும் அதிகரித்துள்ளது. இதனால் ஆர்டிக் பனிப்பாறைகள் உருகி வருகிறது.
 
இந்நிலையில், ஆர்டிக் கடல் பகுதியைச் சுற்றியுள்ள பி.டி,ஏ என்ற பகுதியில் வாழ்ந்து வரும் கடல்வாழ் உயிரினங்களை வைரஸ் தாக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும், இதுபோல் பரவாமல் இருக்க உலக நாடுகள் கூடி பருவநிலை மாற்றம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டுமெனவும் கருத்து தெரிவித்து எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம்ல சின்ன பசங்க அதை பண்ண முடியாது! - புதிய கட்டுப்பாடுகள்!

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments