Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமிராவின் கண்ணில் சிக்கிய விஜய் மல்லையா

Webdunia
சனி, 8 செப்டம்பர் 2018 (12:37 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. போட்டியை காண ஓவல் மைதானத்திற்குள் நுழைந்த மல்லையா ஏ.என்.ஐ. செய்தியாளருடைய காமிராவின் கண்ணில் சிக்கினார்; இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில் விஜய் மல்லையா ஜாமினில் உள்ளார்.



மைதானத்தை விட்டு வெளியேறும் போது ஏ.என்.ஐ. செய்தியாளர் விஜய் மல்லையாவிடன் இந்தியா திரும்புவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்து பேசிய விஜய் மல்லையா, நான் இந்தியா செல்வதை நீதிபதிதான் முடிவு செய்வார். கிரிக்கெட் விளையாட்டின் போது நான் எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிப்பதில்லை எனக் கூறியபடி தனது சென்றார். இந்தியாவில் உள்ள பல வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் முக்கியக் குற்றவாளியாக இருக்கும் விஜய் மல்லையா தற்போது லண்டனில் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments