Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவுடன் ஏவுகணை வியாபாரம்; இந்தியாவுக்கு பொருளாதார தடையா? – அமெரிக்கா விளக்கம்!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (08:17 IST)
ரஷ்யாவிடம் இந்தியா ஏவுகணைகள் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்கா பொருளாதாரத்தடை விதிக்குமா என்ற கேள்விக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த எஸ்400 வானில் வரும் ஏவுகணைகளை 400 கி.மீ பயணித்து அழிக்கும் ஆற்றல் கொண்டது. இந்தியா – ரஷ்யா இடையேயான இந்த ஏவுகணை ஒப்பந்தத்திற்கு அப்போது அமெரிக்கா கண்டனம் தெரிவித்ததுடன், ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டால் பொருளாதார தடை விதிப்பதாகவும் எச்சரித்தது.

இந்நிலையில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்குவதில் உறுதியாக உள்ளது. இந்நிலையில் நட்பு நாடான அமெரிக்கா, இந்தியா மீது பொருளாதார தடை விதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பொருளாதார தடை விதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments