Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவுடன் ஏவுகணை வியாபாரம்; இந்தியாவுக்கு பொருளாதார தடையா? – அமெரிக்கா விளக்கம்!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (08:17 IST)
ரஷ்யாவிடம் இந்தியா ஏவுகணைகள் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்கா பொருளாதாரத்தடை விதிக்குமா என்ற கேள்விக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த எஸ்400 வானில் வரும் ஏவுகணைகளை 400 கி.மீ பயணித்து அழிக்கும் ஆற்றல் கொண்டது. இந்தியா – ரஷ்யா இடையேயான இந்த ஏவுகணை ஒப்பந்தத்திற்கு அப்போது அமெரிக்கா கண்டனம் தெரிவித்ததுடன், ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டால் பொருளாதார தடை விதிப்பதாகவும் எச்சரித்தது.

இந்நிலையில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்குவதில் உறுதியாக உள்ளது. இந்நிலையில் நட்பு நாடான அமெரிக்கா, இந்தியா மீது பொருளாதார தடை விதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பொருளாதார தடை விதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments