Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவர் டைம் பாக்காம ஒர்க் பண்றேன் தெரியுமா! – பெருமையடித்துக் கொண்ட ட்ரம்ப்!

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (09:25 IST)
அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தான் தூக்கம் இல்லாமல் உழைத்து வருவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பல்வேறு பகுதிகளும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளாததே இதற்கு காரணம் என பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் “அதிபர் ட்ரம்ப் மதிய வேளையில்தான் பணிக்கே வருவதாகவும், இஷ்டப்பட்டதை சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவதாகவும்” செய்திகள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலளித்துள்ள ட்ரம்ப் ”என்னை பற்றி தெரியாத பத்திரிக்கையாளர் யாரோ தவறுதலாக ஏதேதோ எழுதியுள்ளார். என்னுடன் இருப்பவர்களுக்கு நான் வேலை பார்ப்பதை பற்றி தெரியும். அதிகாலையில் பணிகளை கவனிக்க தொடங்கும் நான் நள்ளிரவு வரை பணி புரிகிறேன். சில நாட்களில் வெள்ளை மாளிகையிலேயே தங்கி பணி புரியும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது” என்று தன்னை தானே பெருமையாக கூறிக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ரூ.66 ஆயிரத்திற்கும் கீழ் வந்த ஒரு சவரன் விலை..!

Possessive Overload: பாசம் வைத்த கணவர்! குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டுக் கொன்ற தாய்!

அடுத்த கட்டுரையில்
Show comments