Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவம்தான் சுட்டு வீழ்த்தியது - விமான அதிகாரி தகவல்

மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவம்தான் சுட்டு வீழ்த்தியது - விமான அதிகாரி தகவல்
, செவ்வாய், 23 டிசம்பர் 2014 (14:34 IST)
மாயமான மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம் என்று ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி மார்க் துகாய்ன் தெரிவித்துள்ளார். 
 
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.-370 (MH-370) விமானம் கடந்த மார்ச் 8ஆம் தேதி மாயமானது.
 
239 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம், கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்றபோது மாயமானதாக தகவல் வெளியானது. விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்தது விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா நாட்டை சேர்ந்த ராணுவத்தினர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டது. ஆனாலும் எந்த கிடைக்காத நிலையில் தேடுதல் வேட்டையும் தோல்வியிலே முடிந்தது. மாயமான விமானம் தொடர்பான மர்மம் இன்றுவரையில் வெளியாகவில்லை.
 
தற்போது, மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவம் தான் சுட்டு வீழ்த்தியது என்றும், விமானம் கடத்தப்பட்டு தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் அமெரிக்க ராணுவம் விமானத்தை சுட்டு வீழ்த்தியது என்று ப்ரோடியஸ் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை அதிகாரியும், எழுத்தாளருமான மார்க் டுகய்ன் தெரிவித்துள்ளார்.
 
இது பற்றி வானொலி ஒன்றில் பேசிய மார்க் டுகய்ன் ”அமெரிக்க ராணுவம், விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுத்தப்படலாம் என்ற அச்சத்தில் சுட்டு வீழ்த்திவிட்டது. அமெரிக்கா ராணுவ தளம் அமைந்துள்ள, இந்திய பெருங்கடலில் உள்ள டீகோ கார்சியா தீவு அருகே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
webdunia

 
விமானம் கடத்தப்பட்டது என்ற தகவலை அடுத்து இச்சம்பவம் நடந்துள்ளது. மாயமான விமானம் மிகவும் தாழ்வான பகுதியில் பறந்ததை தாங்கள் கண்டதாக மாலத்தீவு வாசிகள் என்னிடம் கூறினர். தீவில் வசிப்பவர்கள் பாராக் தீவு அருகே தண்ணீரில் காலியாக இருந்த தீ அணைப்பானை கண்டுபிடித்துள்ளனர்” என்று மார்க் தெரிவித்துள்ளார். 
 
மேலும், “உளவுத் துறை தகவலின்படி மாயமான மலேசிய விமானம் தொடர்பாக விசாரிக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil