ஜெருசலத்தில் உள்ள தூதரகம் மூடப்படும்: அமெரிக்க வெளியுறவுத்துறை அதிரடி அறிவிப்பு..!

Siva
புதன், 18 ஜூன் 2025 (07:40 IST)
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்த மோதலில் அமெரிக்காவும் நேரடியாக களமிறங்கக்கூடும் என்ற பேச்சுகள் வலுத்து வரும் நிலையில், ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அடுத்த மூன்று நாட்களுக்கு மூடப்படும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
 
அமெரிக்க வெளியுறவுத்துறை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவல்படி, ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ்வில் உள்ள தூதரகத்தின் அனைத்து பிரிவுகளும் இன்று அதாவது ஜூன் 18 முதல் ஜூன் 20 வரை செயல்படாது.
 
அமெரிக்கக் குடிமக்கள் அங்கிருந்து வெளியேறுவது குறித்த எந்த அவசர அறிவிப்பும் தற்போது இல்லை" என்றும், இப்போதைக்கு அத்தகைய உடனடி நடவடிக்கை அவசியம் இல்லை என அமெரிக்கா கருதுகிறது என்பதையும் இது உணர்த்துகிறது. 
 
பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்புப் படையின் அறிவுறுத்தல்களின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருக்கடி நிறைந்த பகுதிகளில் இருந்து குடிமக்கள் வெளியேற உதவுவதற்கான மாற்று திட்டங்கள் எப்போதும் தயாராக இருப்பதாகவும், கூடுதல் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக தெரிவிக்கப்படும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!

டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும் மீண்டும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments