Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோபிடன் முன்னிலை

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (07:36 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் உலகமே இந்த தேர்தலின் முடிவை அறிய காத்திருக்கிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபிடன் முன்னிலை வகித்து வருவதாக முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது
 
சற்று முன் வெளியான தகவலின்படி ஜோ பிடன் 85 எலக்டோரல் வாக்குகளும், டொனால்ட டிரம்ப் 55 வாக்குகளும் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
இண்டியானா, கென்டகி, ஜார்ஜியா ஆகிய மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில்  இண்டியானாவில் 11 எலக்டோரல் வாக்குகளை டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளதாகவும், கென்டகியில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி பெற்றதாக தெரிகிறது.
 
ஆனால் அதே நேரத்தில் டெக்சாஸ், நியூ ஹாம்ஷ்பையர் ஆகிய பகுதிகளில் ஜோ பிடன் முன்னிலை வகித்து வருகிறார். மேலும் ஜார்ஜியாவில் 4 வாக்குகளுடன் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார் என்றும், மேற்கு விர்ஜினியாவில் டொனால்ட் டிரம்ப் 5 எலக்டோரல் வாக்குகள் பெற்றுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொத்த வாக்குகளை கணக்கிடும்போது டிரம்ப் 94 இடங்களிலும் ஜோ பிடன் 129 இடங்களிலும் முன்னணி உள்ளதால் தற்போதைய கணக்கின்படி ஜோபிடன் முன்னிலையில் உள்ளார்.
 
அமெரிக்காவில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் குறிப்பாக 70%க்கும் அதிகமான தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாலும் முழு முடிவுகள் அறிய இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments