Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த வாக்காளர்கள் பெயரில் மின்னஞ்சலா? அமெரிக்க அதிபர் தேர்தலில் திடுக்கிடும் தகவல்!

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (08:10 IST)
இறந்த வாக்காளர்கள் பெயரில் மின்னஞ்சலா?
அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுவிட்டார் என்றும் அவர் விரைவில் அமெரிக்க அதிபராக பதவி ஏற்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
ஆனாலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை என்றும் நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்துள்ளார் என்றும் இந்த வழக்கின் முடிவைப் பொறுத்து அடுத்த அதிபர் உறுதி செய்யப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ஜார்ஜியா மாகாணத்தில் மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால் அதன் முடிவுகள் அமெரிக்க அதிபர் தேர்தலின் ஒட்டுமொத்த முடிவை பாதிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மின்னஞ்சலில் வந்த வாக்குகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக டிரம்ப் தரப்பினர் குற்றம்சாட்டி உள்ளனர். அதனை உறுதி செய்வது போல் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் இறந்த வாக்காளர்கள் பெயரில் மின்னஞ்சல் வந்திருப்பதாகவும்,  இந்த மின்னஞ்சல்கள் ஜோபைடன் ஆதரவாக வந்த மின்னஞ்சல் வாக்குகளாக பதிவு செய்யப்பட்டு மோசடி செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments