Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் விழுந்த அமெரிக்காவின் குண்டு: பெரும் பரபரப்பு

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (23:01 IST)
அமெரிக்க விமானத்தில் குண்டு ஒன்று ஜப்பானில் உள்ள ஒரு கிராமத்தில் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவின் அணுகுண்டு ஜப்பானின் விழுந்ததால் நாடு முற்றிலும் சிதிலமடைந்தது. அதையடுத்து தற்போது மீண்டும் அமெரிக்க ராணுவத்தில் பயிற்சி விமானத்திலிருந்து ஒரு குண்டு ஜப்பானில் உள்ள ஒரு கிராமத்தை மீது விழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த குண்டு டம்மி குண்டுதான் என்றும் இதனால் குண்டு விழுந்த பகுதியில் எந்த விதமான சேதமும் இல்லை என்றும் அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன 
 
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள மி சாவா என்ற பகுதியில் ராணுவ பயிற்சி தளத்தை ஜப்பானின் அனுமதியுடன் அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறது. இங்கிருந்து அமெரிக்க ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று f-16 என்ற ராணுவ விமானத்தில் ராணுவ விரர்கள் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர்
 
அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக 200 கிலோ எடை கொண்ட குண்டு ஒன்று ஒரு கிராமத்தின் மீது விழுந்தது. ஆனால் அந்த குண்டு டம்மி உகுண்டு என்பதால் வெடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் குண்டு விழுந்த பகுதியில் அந்த கிராமத்திலுள்ள மக்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர். இதனை அடுத்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கிராம மக்களிடம் சென்று அது டம்மி கொண்டுதான் என்றும் அதனால் எந்தவித ஆபத்தும் இல்லை என்று கூறி விளக்கம் அளித்த பின்னரே அந்த கிராமத்தினர் சமாதானம் அடைந்தனர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை இலங்கைக்கு மாறியது ஏன்? இதுதான் காரணம்..!

கடலூர் அருகே கடலில் சிக்கிய மீனவர்கள் பத்திரமாக மீட்பு! களத்தில் இறங்கிய ஹெலிகாப்டர்..!

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. சில தேர்வுகளும் ரத்து..!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் தொடர்ந்து குறைவு: எப்போது கரையை கடக்கும்?

இன்று காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments