Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புற்றுநோயை முழுவதும் குணப்படுத்தும் மருந்து! – அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் சாதனை!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (15:22 IST)
அமெரிக்க புற்றுநோய் ஆய்வாளர்கள் புற்றுநோயை முழுவதுமாக குணப்படுத்த கூடிய புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் குணப்படுத்த முடியாத நோய்களில் முக்கியமான நோயாக புற்றுநோய் உள்ளது. குடல் புற்று, கல்லீரல் புற்று என புற்றுநோய்கள் உடலின் எந்த பகுதியிலும் ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது வரை புற்றுநோய் ஏற்பட்டால் அதை அழிக்க கீமோதெரபி சிகிச்சைதான் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் புற்றுநோயை முற்றிலும் குணமாக்கக் கூடிய டோஸ்டார்லிமாப் (Dostarlimab) என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்தை 18 குடல் புற்றுநோயாளிகளிடம் சோதனை செய்ததில் எந்த வித பக்க விளைவுமின்றி அவர்கள் 100 சதவீதம் குணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த மருந்தை மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் பரிசோதித்து அனுமதி வழங்கும் பட்சத்தில் உலகில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கு இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments