Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானை தாக்கிவிட்டு வெற்றிகரமாக திரும்பியது அமெரிக்க படை: டிரம்ப் அதிர்ச்சி தகவல்..!

Siva
ஞாயிறு, 22 ஜூன் 2025 (08:20 IST)
ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்களை தாக்கிவிட்டு அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக திரும்பிவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருப்பது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளிடையே போர் பதற்றம் நீடித்துவரும் நிலையில், இரு நாடுகளும் ஒன்றை ஒன்று மாறி மாறித் தாக்கி வருகின்றன.
 
இந்தச் சூழலில், ஈரானில் உள்ள ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz) மற்றும் இஸ்ஃபஹான் (Isfahan) ஆகிய மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 
 
"எங்களது தாக்குதல் வெற்றிகரமாக முடிந்துவிட்டது," என்றும், "எங்கள் அனைத்து விமானங்களும் ஈரான் வான்வழியை விட்டு வெளியேறிவிட்டன," என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், "எங்களின் அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக அமெரிக்காவிற்கு திரும்பிவிட்டன," என்றும், "அமெரிக்காவின் சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்," என்றும், தாக்குதலின்போது கவனம் செலுத்திய வீரர்களுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். "உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்ததில்லை," என்றும் டிரம்ப் தனது பதிவில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 
ஈரான் மீதான அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் உலக நாடுகள் இடையே மூன்றாவது உலகப்போர் குறித்த பதற்றம் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments