Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்கள் - ஐநா கவலை

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (10:45 IST)
ஆப்கானிஸ்தானில் மோசமான சூழல் நிலவி வரும் நிலையில் மக்கள் அங்கிருந்து வெளியேற துவங்கியுள்ளனர். 
 
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு வந்த அமெரிக்க ராணுவம் அங்கிருந்து சமீபத்தில் வெளியேறி வருகிறது. இம்மாத இறுதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. 
 
அமெரிக்கப் படைகள் வெளியேறுவதைத் தொடர்ந்து நிலைமை அங்கு மிக மோசமாக மாறிவருகிறது. ஆம், அமெரிக்கப் படைகள் நாடு திரும்பியதை அடுத்து தலிபான்களின் தாக்குதல் அதிகமாகியுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான காந்தகாரை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தலைநகர் காபுல் போன்ற முக்கிய நகரங்களையும் தலிபான்கள் நெருங்கிவருகிறார்கள் என தகவல் தெரிவிக்கின்றன.
 
இதே நிலையில் தலிபான்கள் முன்னேறிச் சென்றால், அவர்கள் தலைநகர் காபூலை 30 நாட்களில் தனிமைப்படுத்த முடியும், 90 நாட்களில் கைப்பற்றலாம் என்று அமெரிக்க உளவுத்துறை தகவலை மேற்கோள் காட்டி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.
 
ஆப்கானிஸ்தானில் இத்தகைய சூழல் நிலவி வரும் நிலையில் மக்கள் அங்கிருந்து வெளியேற துவங்கியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களால் ஐநா கவலை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. அமைச்சர் பொன்முடி மீது பொதுநல வழக்கு..!

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு.. கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன் - கமல்ஹாசன்!

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இன்று மாலைக்கான வானிலை எச்சரிக்கை..!

பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதியை நீக்க உத்தரவு.. மீறினால் அங்கீகாரம் ரத்து! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments