Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய வீரர்களுக்கே ஏன் என்று தெரியவில்லை… உக்ரைன் அதிபர் கருத்து!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (17:02 IST)
உக்ரைன் நாட்டில் படையெடுத்துள்ள ரஷ்ய படைகளை சில இடங்களில் உக்ரைன் பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து இன்று 8  வது நாளாகப் போர் நடந்து வருகிறது. இதில், ராணுவவீரர்களும், பொதுமக்களும் பலியாகி வருகின்றனர்.  இதற்கிடையே இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும், அவை தோல்வி அடைந்தன.

இந்நிலையில்,  ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர்  உக்கிரம் அடைந்து வருகிறது. உக்ரைனுக்கு நேட்டோ நாடுகளும் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய  நாடுகள் அணு ஆயுத உதவிகள் செய்து வருவதாக ரஸ்யா நேற்று குற்றம் சாட்டியது.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் சமீபத்தில் பேசியதில் ‘ரஷ்ய படைகள் பல இடங்களில் ஊடுருவி தாக்குதல் நடத்தினாலும் அவர்களால் ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியவில்லை.  உக்ரைன் மக்கள் ராணுவத்தோடு இணைந்து ரஷ்ய வீரர்களுக்கு எதிராக போரிடுகிறார்கள். மக்களின் வீரத்தைப் பார்த்து பல இடங்களில் ரஷ்யப் படைகள் பின்வாங்குவதாக செய்திகள் வருகின்றன. சில பகுதிகளில், ரஷ்ய வீரர்களை உக்ரைன் மக்கள் சிறைப்பிடித்துள்ளனர். அவர்களிடம் மக்கள் ஏன் இங்கே வந்தீர்கள் என்று கேட்டதற்கு ‘எங்களுக்கு தெரியாது’ என்று கூறியுள்ளனர்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments