Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 15% வரி: சீனா அதிரடி..!

Mahendran
செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (15:54 IST)
கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து, அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும் என சீன அரசு பதிலடி கொடுத்துள்ளது. இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும். அதேசமயம், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். ஆனால், கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரியை ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தம் செய்வதாகவும் அவர் அறிவித்தார்.
 
இந்த சூழ்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் தனது அதிரடியை தொடங்கியுள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, திரவ இயற்கை எரிவாயு போன்றவற்றுக்கு 15% கூடுதல் வரி விதிக்கப்படும். மேலும், எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என சீன அரசு தெரிவித்துள்ளது.
 
அமெரிக்காவுக்கு நிகராக பொருளாதார வளர்ச்சியில் முன்னேறியுள்ள சீனா, நேரடியாக அமெரிக்காவுடன் வர்த்தக போரில் ஈடுபட உள்ளதாக மறைமுகமாக அறிவித்துள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னொரு பாபர் மசூதி பிரச்சனை ஆகிவிட கூடாது: திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தமிழக அரசு..!

திருப்பரங்குன்றம் விவகாரம்! இந்து முன்னணி போராட்டத்திற்கு அனுமதி! எங்கே எப்போது?

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கைதி மனைவிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்.. நீதிமன்றம் உத்தரவு..!

இன்று பூடான் மன்னர்.. நாளை பிரதமர் மோடி.. கும்பமேளாவில் புனித நீராடும் விஐபிக்கள்..!

ஓய்வு பெற்றவுடன் தேர்தல் ஆணையருக்கு கவர்னர் பதவியா? அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments