Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூரியனில் இரண்டு கருங் குழிகள்: நாசா தகவல்

சூரியனில் இரண்டு கருங் குழிகள்: நாசா தகவல்
, வியாழன், 9 ஜூன் 2016 (21:12 IST)
நமக்கு தெரிந்தவரையில் சூரியன் ஒரு நெருப்பு பந்து. ஆனால் சூரியனின் மேற்பரப்பில் இரண்டு கருங் குழிகள் இருப்பதை நாசா அண்மையில் கண்டறிந்துள்ளது.


 

 
பிலாக்ஹொல் என்று அழைக்கப்படும் கருங் குழி இன்றும் மனித அறிவுக்கு எட்டாத புதிராக இருந்து வருகிறது. தற்போது இந்த கருங் குழி விண்மீன்களுக்கு இடையே உள்ள வெளியாக கருதப்படுகிறது. மேலும் இந்த கருங் குழிக்கு அப்பால் வேறு பிரபஞ்சம் இருக்கலாம் என்று இயற்பியல் ஆய்வாளர் ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்தார்.
 
சூரியனின் மேற்பரப்பில், இரண்டு பெரிய கருங் குழிகள் இருப்பதை சமீபத்தில் நாசா கண்டுபிடித்துள்ளது. இதுபோன்ற கருங் குழிகளிலிருந்து சூரிய துகள்கள் நிரம்பிய அதிவேக காற்று உற்பத்தியாவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த காற்றின் வேகம், சூரியனின் மற்ற பகுதிகளில் வீசும் காற்றைவிட மூன்று மடங்கு வேகம் மிக்கவையாக இருக்கின்றன. 
 
சூரிய புயல்கள், சூரிய மண்டலத்தில் கணிக்க முடியாத புவி காந்தப்புல மாற்றங்களை உருவாக்கும். இதனால் பூமியின் சகல தகவல் தொடர்பு அமைப்புகளும் பாதிக்கப்படும்.
 
மேலும் கருங் குழிகள் உள்ள பகுதிகளில் சூரியனின் மற்ற பகுதிகளைவிட வெப்பம் குறைவாகவும், அடர்த்தி குறைவாகவும் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இஸ்லாமிய பெண்களின் உடை அலங்காரமா? அடிமைத்தனத்தின் சின்னமா?