Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென ரூ.40 ஆயிரம் கோடி நஷ்டமடைந்த டுவிட்டர்: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (07:37 IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் டுவிட்டர் கணக்கு சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டது என்பதும் அதன் பின்னர் நிரந்தரமாக அவருடைய கணக்கு நீக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
அமெரிக்க தேர்தல் குறித்து தவறான மற்றும் வன்முறையை தூண்டும் விதமான கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் பதிவு செய்து வந்ததால் அவருடைய கணக்கில் நீக்கப்பட்டது என்று டுவிட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்தது
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் டுவிட்டர் கணக்கை நீக்கியதால் டுவிட்டர் நிறுவனத்திற்கு சுமார் 40,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
டிரம்ப் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்கியதால் அந்நிறுவனத்தின் பங்குகள் 12 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளதாகவும் இதனை அடுத்து அந்நிறுவனத்திற்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது
 
இருப்பினும் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற பின்னர் டுவிட்டரின் பங்குகள் மீண்டும் விலை ஏறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபரின் கணக்கை நீக்கியதால் சுமார் 40,000 கோடி நஷ்டம் அடைந்த ட்விட்டர் நிறுவனம் குறித்த தகவல் தற்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments