ட்விட்டர் லோகோவில் குருவிக்கு பதிலாக சீம்ஸ்..! – எலான் மஸ்க் அட்டகாசம்!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (08:42 IST)
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் அதில் இருந்த குருவி லோகோவுக்கு பதிலாக சீம்ஸ் நாய் லோகோவை இடம்பெற செய்துள்ளது வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்பட்டு வரும் ட்விட்டர் சமூகவலைதள நிறுவனத்தை சமீபத்தில் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் வாங்கினார். அதன் பின்னர் அதில் ப்ளூ டிக்குகள் பெற கட்டணம், பணியாளர்கள் வேலை நீக்கம் என அவர் தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகள் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் சில நாட்கள் முன்னர் ட்விட்டரின் புதிய சிஇஓ இவர்தான் என ஜப்பானிய நாயான ஷிபா இனுவின் படத்தை பதிவிட்டிருந்தார், இந்த ஷிபா இனு சீம்ஸ் என்ற பெயரில் மீம் மெட்டீரியலாக புகழ்பெற்றதாக உள்ளது. இந்நிலையில் இதுநாள் வரை ட்விட்டரின் லோகாவாக இருந்து வந்த நீலக்குருவி லோகோவை திடீரென நீக்கிவிட்டு சீம்ஸ் நாயின் படத்தை லோகோவாக இடம்பெற செய்துள்ளார் எலான் மஸ்க். இது ட்விட்டர் பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

1 லட்ச ரூபாய் கொடுத்தால் முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள்: அசாம் முதல்வர்

கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் தான் SIRஐ எதிர்க்கின்றன: வானதி சீனிவாசன்

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன் விவகாரம்.. அரசின் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments