Webdunia - Bharat's app for daily news and videos

Install App

$304 மில்லியன் மதிப்பில் ஏவுகணைகளை வாங்கும் துருக்கி.. விற்கும் அமெரிக்கா.. இந்தியாவின் நிலை என்ன?

Siva
வெள்ளி, 16 மே 2025 (08:23 IST)
இந்தியா–பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தின் போது, அமெரிக்கா இரு தரப்பிலும் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், துருக்கி வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது என்பதும், பாகிஸ்தான் தங்கள் நட்பு நாடு என்று கூறியதோடும், பாகிஸ்தானுக்கு தேவைப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளையும் வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
துருக்கி வழங்கிய ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசிய போதிலும், இந்தியாவில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், தற்போது துருக்கி 304 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை அமெரிக்காவிலிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தகவல்கள் உள்ளன. இரண்டு நேட்டோ நட்பு நாடுகளுக்கு இடையே இந்த வர்த்தகம் நடைபெறுகிறது என்றும், பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த வர்த்தகம் நடைபெற்று வருகிறது என்றும் இரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்த ஒப்பந்தத்தில், 53 நவீன ஏவுகணைகள் உள்பட 113 ஏவுகணைகளை துருக்கி வாங்கியுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
அமெரிக்கா ஒரு பக்கம் இந்தியா–பாகிஸ்தான் நாடுகளை சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் பாகிஸ்தானுக்கு ஆதரவு தரும் துருக்கி நாட்டிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் சூழலில், இந்தியாவின் நிலை என்ன என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments